உத்தரப்பிரதேசத்தில் தமிழ் கற்றுக்கொடுப்பார்களா? - பாமாகவின் அன்புமணி ராமதாஸ் கேள்வி
டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியானது மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி பற்றிய தொகுப்புகள் எல்லாம் இந்தி மொழியில் உருவாக்கப்படுள்ளது என்றும்,
ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்களும் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்தி திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அனைவரும் இந்தி கற்றுக்கொண்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கு உதவும் என்று அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் அது நேர் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தி திணிப்பு என்பது கூடாது.
உத்தரப்பிரதேசத்தில் இந்தியும் ஆங்கிலமும் வைத்துள்ளனர். அங்கு தமிழ் கற்றுக்கொடுப்பார்களா? எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது.
அப்படி திணிக்கப்படும் போது அது ஒற்றுமையை ஏற்படுத்தாது. வேற்றுமையையே ஏற்படுத்தும். இதே தான் 1950-60 களில் செய்ய முயன்றார்கள். அந்த நிலை மீண்டும் வரக்கூடாது.” என தெரிவித்தார்.