12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!
12ஆம் வகுப்பு தேர்வை ரத்துசெய்ய முடிவுசெய்தன. தமிழ்நாட்டில் பல்வேறு கட்ட ஆலோசனை, கருத்துக்கேட்புக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் ரத்து செய்தார்.
இந்த நிலையில்செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்:
10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், கருத்துகள் வரப் பெறுகின்றன.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் அடிப்படையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு நன்றாகப் படிப்பவர்கள் உட்பட அனைத்து நிலை மாணவர்களும் திருப்தி அடையும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.
மேலும், பள்ளிகளில் கல்விக் கட்டணமாக 75 சதவீதத் தொகையை 2 தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதாக இ-மெயில், தொலைபேசி மூலம் நிறைய புகார்கள் வருகின்றன.
புகார் கூறப்படும் பள்ளிகள் மீது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.