தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படுமா..? அமைச்சரிடம் கேள்வி கேட்ட 12-ம் வகுப்பு மாணவி..! ஆடியோ வைரல்..!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும், ஆனால் கொரோனா பரவல் குறையட்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், அமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்ச்ரும் பொறுமையாக கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் எனவும், அந்த மாணவியை நன்கு படிக்க சொல்லியும் அறிவுரை வழங்கினார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.