கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்; அது செங்கோட்டையன் காலத்தில் நடந்தது - அன்பில் பதிலடி
விஜய் பழைய செய்திகளை வைத்து பேசுவதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் பேச்சு
விஜய், தமிழ்நாட்டில் எதற்காக மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது? என்று எழுப்பியிருந்தார். இந்நிலையில் ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில் பயன்பெற்று இருப்பார் என்ற நிலைமையை உருவாக்கி தந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் கரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலுப்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு முதல்வர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதாக நாம் சொல்லவில்லை. அதற்கான தரவுகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் இன்று பெண்களின் மனநிலை.
அமைச்சர் பதிலடி
இன்னொன்று ஆதி திராவிட நலக்குழு மனநிலை. இதனை நாம் தொன்று தொட்டு பார்த்து வருகிறோம். ஈரோட்டில் விஜய் பேசும் போது, தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என்றார். அது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் 2017-18ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலத்தில் இதன் சதவிகிதம் 16ஆக இருந்தது. தற்போது அந்த சதவிகித 7.7ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வந்த செய்தி.
அப்போதே அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. பழைய தகவல்களை வைத்துக் கொண்டு தவெக தலைவர் விஜய் திமுக அரசை குறை கூறி வருகிறார். அதனால் விஜய் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.