பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

School Opening Anbil Mahesh Poyyamozhi
By Thahir Oct 02, 2021 08:08 AM GMT
Report

நவம்பர் 1ம் தேதி முதல் 1-8ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜங்சன் அருகே திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக அஷ்தி நினைவு தூணில் - 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மரத்தான் ஓட்டப் பந்தயத்தை துவக்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி | Anbil Mahesh Poyyamozhi School Opening

"தமிழ்நாட்டில் ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது போல நவம்பர் 1ம் தேதி முதல் 1-8வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்படும்.

1ம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிந்து இருக்க இயலாது. இந்த சிக்கல்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது.

தற்போதைய நிலையில் சின்ன குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பதே நோக்கம் அந்த அடிப்படையில்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 98 சதவீத ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி இருக்கிறார்கள்.

பல்வேறு வியாதிகளுக்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மட்டுமே 2 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்த இயலாத நிலையில் இருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு என்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பதுதான்." என்று பேட்டியளித்துள்ளார்.