விஜய்யை பார்க்க சென்று உயிரிழந்த வாலிபர்: அமைச்சர் நேரில் அஞ்சலி

Thamizhaga Vetri Kazhagam
By Fathima Mar 26, 2026 06:43 AM GMT
Report

விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த விக்னேஷ் என்ற இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார்.

கடந்த 4ம் தேதி தஞ்சையில் தமிழக வெற்றி கழத்தின் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது, இதற்காக வந்த விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்த இ்ளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் மே்றகொண்டனர்.

அப்போது விக்னேஷ், ஆரோன் என்ற இளைஞர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்கள்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர், விக்னேஷுக்கு தலையில் பலத்த அடியும், ஆரோனுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.

விஜய்யை பார்க்க சென்று உயிரிழந்த வாலிபர்: அமைச்சர் நேரில் அஞ்சலி | Anbil Mahesh Meets Vignesh Father

விக்னேஷ் கோமா நிலைக்கு சென்றுவிட்டார், தொடர்ந்து 19 நாட்கள் சிசிக்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பால் வியாபாரியான அவரது தந்தையின் பேச்சு பலரையும் கலங்கவைத்தது, இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயரிழந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உயிரிழந்த வரைக்கும் தவெகவை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் யாருமே வந்து பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.