டிஸ்சார்ஜ் ஆனார் அன்பில் மகேஷ்..மருத்துவர்கள் கூறிய அறிவுரை
அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் இருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
திடீர் உடல்நல கோளாறு

நேற்று திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரு ஓசூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். முதலில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்ட அவர் பின்பு பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
டிஸ்சார்ஜ்
அஜீரண கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று காலை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடல்நிலை சீரான நிலையில் இருக்கும் காரணத்தால், அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். டிஸ்சார்ஜ் ஆன அவரிடம் மருத்துவர்கள் சிறிது நாளிற்கு நாள் ஒய்வு எடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளார். முன்னதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
களுத்துறையை அதிரவைத்த துப்பாக்கிசூடு : துப்பாக்கிதாரிகளின் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு IBC Tamil