கல்யாண வீட்டுல சிகரெட் பிடித்த பிரபல நடிகை - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Ananya Panday
By Thahir Mar 16, 2023 11:45 AM GMT
Report

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே சிகரெட் பிடித்த காட்சிகள் வைரலான நிலையில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கல்யாண வீ்ட்டில் இது தேவையா?

கடந்த 2019 ஆண்டு 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனன்யா பாண்டே இவர் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை அனன்யா பாண்டே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறார்.

கல்யாண வீட்டுல சிகரெட் பிடித்த பிரபல நடிகை - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் | Ananya Panday Caught Smoking At Marriage

அனன்யா பாட்டேவின் குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இதில் பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே தனது தோழிகளுடன் சேர்ந்து சிகரெட் பிடித்துள்ளார்.

தன் தோழிகளுடன் விலை உயர்ந்த சிகரெட்டை புகைத்த அனன்யா பாண்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.