மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் நியமனம்

india centre finance minister ananda nageswaran chief economic advisor nirmala seetharaman
By Swetha Subash Jan 29, 2022 12:33 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஆனந்த் நாகேஸ்வரனின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

ஏற்கனவே பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் பகுதி நேர உறுப்பினராக 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ள இவர் ஐஐஎம் அகமதாபாத்தில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார்.

மேலும், ஆனந்த் நாகேஸ்வரன் அமெரிக்காவின் மசஜூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டரல் பட்டம் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சகத்தின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் உடனடியாக தனது பணியில் இணைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.