சிறுவனின் திறமையை ஒரு சிறுகதையாக சொன்ன ஆனந்த் மஹிந்திரா - வைரலாகும் பதிவு

viral ananda-mahindra share-video
By Nandhini Apr 01, 2022 11:32 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் மீன்பிடிப்பதற்காக நேர்த்தியாக கையாண்டு, இறையை தூண்டில் முள்ளில் சொருகி ஆற்றில் வீசுகிறான். அவன் மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் மீனுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்த்தப்படி தூண்டிலில் மீன் சிக்கிக்கொண்டது. அதை மிகவும் அழகாக இழுத்து அந்த பிஞ்சு கைகளால் அந்த மீனை பிடித்து, தான் கொண்டு வந்த பையில் வைத்து எடுத்துச் செல்கிறான்.

இச்சிறுவனின் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இது எனது இன்பாக்ஸில் கருத்து இல்லாமல் காட்டப்பட்டது. சிக்கலான உலகில் விசித்திரமான அமைதியாக இருக்கிறது. உறுதிப்பாடு + புத்திசாலித்தனம் + பொறுமை = வெற்றி என்பதை நிரூபிக்கும் ஒரு ‘சிறுகதை’ என்று பதிவிட்டுள்ளார்.