ஏழை இளைஞனின் திறமையை வியந்து பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா - வைரலாகும் வீடியோ

ananda-mahindra share-video
By Nandhini Mar 29, 2022 11:44 AM GMT
Report

தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு இளைஞன் தன் தலையில் கைகளால் பிடித்தப்படி, பெரிய துணி மூட்டையை சுமந்துக் கொண்டு,  சைக்கிளை வளைத்து வளைத்து சாலையில் ஓடிச் செல்கிறார்.

இதை பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் வீடியோவை எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்த மனிதன் ஒரு மனித செக்வே, அவனது உடலில் ஒரு கட்டமைக்கப்பட்ட கைரோஸ்கோப் உள்ளது. நம்பமுடியாத சமநிலை உணர்வு. எவ்வாறாயினும், அவரைப் போன்ற திறமையான ஜிம்னாஸ்ட்கள்/விளையாட்டு வீரர்களாக இருக்கக்கூடிய பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.