என்ன மனுஷன் சார்... மைதானத்தில் தலை வணங்கிய ஜப்பான் மேனேஜர் - ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி டுவிட்...!
உலக கால்பந்து போட்டியில், மைதானத்தில் தலை வணங்கிய ஜப்பான் மேனேஜரை பார்த்து வியந்துபோன ஆனந்த் மகேந்திரா டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா.
இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார்.
தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர். இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளிக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுத்தார் ஆனந்த் மகேந்திரா.
தலை வணங்கிய ஜப்பான் மேனேஜர்
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.
உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.
இத்தொடரில் காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் அணிகள் விறுவிறுப்புடன் விளையாடி வருகிறது. இந்நிலையில், குரோஷியா அணியை எதிர்த்து விளையாடியது ஜப்பான் அணி. 1-1 என ஆட்டம் டை ஆனதால் பெனால்டி கிக் அவுட் கொடுக்கப்பட்டது.
இதில், குரோஷியா 3 கோல்களை அடித்து அசத்தியது. ஆனால், ஜப்பானால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக காலிறுதி வாய்ப்பை ஜப்பான் இழந்து வெளியேறியது.
இருந்தாலும், இப்போட்டி முடிவடைந்த பிறகு ஜப்பான் அணியின் மேனேஜர் ஹஜிம் மொரியாசு (Hajime Moriyasu) தனது தலையை தாழ்த்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.
ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி டுவிட்
இந்நிலையில், ஆனந்த மகேந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஜப்பான் அணி மேனேஜர் ஹஜிம் மொரியாசு ரசிகர்களிடம் நன்றியுடன் வணங்கியுள்ளார். இதை விவரிக்க இரண்டு வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன. அவை, கண்ணியம் மற்றும் கருணை" என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான டுவிட் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Just two words to describe this: Dignity. Grace.
— anand mahindra (@anandmahindra) December 6, 2022
(Team Japan manager Hajime Moriyasu bowing to fans in gratitude) pic.twitter.com/wH2rNMhZ2A
Hajime Moriyasu bowing to fans in gratitude???? pic.twitter.com/kLluUSIVY3
— Madhusudana Reddy Y (@ymrbooks) December 6, 2022
Japan manager Hajime Moriyasu bowed in appreciation to the fans who traveled all the way to Qatar to support their team ??
— ESPN FC (@ESPNFC) December 5, 2022
Respect! ❤️ pic.twitter.com/zokP53cCoC