யாருப்பா நீங்களெல்லாம்…ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட ஒரு சக்கர சிலந்தி - வைரலாகும் வீடியோ
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா. இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார். தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர்.
இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளிக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுத்தார் ஆனந்த் மகேந்திரா.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சுவாரஸ்யமானது. ஒரு சக்கர சிலந்தி. இது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே ஒரு தொகுதி விற்பனையாளராக இருக்கும் என்பதில் உறுதியாக இல்லை.
பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் பணியாளர்களுக்கான சாத்தியமான இயக்கம் சாதனம்? நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் டுவிட்டுக்கு பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Interesting. A wheeled Spider. Not sure this will be a volume seller for recreational purposes alone. A potential mobility device for Defence & Paramilitary personnel? What do you think? @vijaynakra @Velu_Mahindra pic.twitter.com/vzTaeHlTja
— anand mahindra (@anandmahindra) October 11, 2022