இளைஞரின் கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்து போன ஆனந்த் மகேந்திரா - வைரலாகும் வீடியோ

Viral Video Anand Mahindra
By Nandhini Jun 03, 2022 05:49 AM GMT
Report

கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் எனக்கு ஒரு வீடு கட்டி தாருங்கள் என்று பாட்டி கோரிக்கை வைத்தார். இது குறித்து அறிந்த ஆனந்த் மஹிந்திரா வீடு கட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.

பின்னர், மஹேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு கட்டுமானப் பணிகளை நடித்தி முடித்தனர்.

மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார்.

இது குறித்து மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தப் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒருவரின் திறமையை வியந்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர், பூமியை உலுக்கும் கண்டுபிடிப்பு அல்ல. ஆனால் நான் உற்சாகமாக இருக்கிறேன், ஏனெனில் அது வளர்ந்து வரும் ‘டிங்கரிங்’ கலாச்சாரத்தைக் காட்டுகிறது. அமெரிக்கா, தங்கள் அடித்தளத்தில்/கேரேஜ் பட்டறைகளில் பரிசோதனை செய்யும் பழக்கத்தால், கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாறியது. டிங்கரர்கள் புதுமையின் டைட்டன்ஸ் ஆகலாம் என்று பதிவிட்டுள்ளார்.