புத்தாண்டில் நல்ல தொடக்கம்; ஆசீர்வதித்த கோவில் யானை - ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி...!
நடனமாடிய பெண்ணுடன் நடமாடி ஆசீர்வதித்த யானையின் வீடியோவை ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா. இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார்.
கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளிக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுத்தார் ஆனந்த் மகேந்திரா.
தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர் ஆனந்த் மகேந்திரா. இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஆசீர்வதித்த யானை
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கர்நாடகா, மாநிலம், ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோவில் ஒரு பெண் யானை முன்பு பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்தார்.
இப்பெண்ணின் நடனத்தால் மகிழ்ச்சி அடைந்த கோவில் யானை அப்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடியது. மேலும், நடனமாடிய அப்பெண்ணை கோவில் யானை ஆசீர்வாதம் செய்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், ஆனந்த் மகேந்திரா தற்போது வைரலாகும் ஆசீர்வாதம் செய்த கோவில் யானையின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், கர்நாடகா, மாநிலம், ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோவில், கடீல், அற்புதம். மேலும் புத்தாண்டு மகிழ்ச்சியாக அமைய, கோயில் யானை நம் அனைவருக்கும் ஒரு ஆசீர்வாதத்தை அளிக்கிறது என்று நான் நினைக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.