அச்சங்களை உண்மையில் இருப்பதை விட பெரிதாக்குகிறோம்... - ஆனந்த் மகேந்திரா டுவிட்...
அச்சங்களை உண்மையில் இருப்பதை விட பெரிதாக்குகிறோம் என்று ஆனந்த் மகேந்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா. இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார்.
தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர். இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளிக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுத்தார் ஆனந்த் மகேந்திரா.

ஆனந்த் மகேந்திரா டுவிட்
இந்நிலையில், ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், இது என்னை கடைசி வரை ஏமாற்றியது. தார்மீக? எங்கள் பிரச்சனைகள் மற்றும் அச்சங்களை உண்மையில் இருப்பதை விட பெரிதாக்குகிறோம். தீர்வுகள் எப்போதும் நம் பிடியில் இருக்கும். உங்கள் வாரம் எனக்கு தேவைப்படுவதை விட கவலைக்குரியதாக தோன்ற வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
This fooled me till the very end.
— anand mahindra (@anandmahindra) December 12, 2022
The moral? We make our problems & fears larger than they really are. The solutions are always within our grasp. Don’t make your week appear more worrisome than it needs to me. #MondayMotivation. pic.twitter.com/Ex6jGQg4fa