வெள்ளிக்கிழமை காட்டில்... Wait for the last one… - பிரிமிக்க வைக்கும் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா...!
ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரிமிக்க வைக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா. இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார்.
தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர்.
இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளிக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுத்தார் ஆனந்த் மகேந்திரா.

வெள்ளிக்கிழமை காட்டில்...
இந்நிலையில், ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ஒரு நடன கலை நிகழ்ச்சியில் காட்டில் சிங்கங்கள், பறவைகள் இருப்பதுபோல தத்துரூபமாக தனது உடலில் வண்ணங்களை பூசி வெளிக்காட்டியது பார்வையாளர்களை அனைவரையும் பகிர்ந்தது.
இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா அருமையான... வெள்ளிக்கிழமை காட்டில்.... கடைசி வரை காத்திருங்கள்... என்று பதிவிட்டுள்ளார்.
Fantastic. #Friday in the Forest. Wait for the last one… pic.twitter.com/puTdrKTlMW
— anand mahindra (@anandmahindra) December 9, 2022