‘’ ஹே மேன் நான் முதல்ல இந்தியன் ‘’ - சக்தே இந்தியா ஸ்டைலில் பதிலடி கொடுத்த மஹிந்திரா நிறுவனர்

twitter indian anandmahindra
By Irumporai Jan 09, 2022 05:21 AM GMT
Report

சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய பதிவுகளின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பவர் ஆன்ந்த மஹிந்திரா. அதிலும் குறிப்பாக இவருடைய ட்விட்டர் பக்கத்தில் போடப்படும் பல பதிவுகள் வேகமாக வைரலாகிவிடும்.

இந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் ஒருவர் நேற்று ஆனந்த் மஹிந்திராவிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

அதில்,”இது சற்று முட்டாள்தனமான கேள்விதான். இருந்தாலும் பரவாயில்லை நான் கேட்கிறேன். நீங்கள் ஒரு பஞ்சாபிதானே சார்? ” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் அந்த கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா அதிரடியான பதிலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதுதான் தற்போது வைரலாகி வருகிறது, அதாவது ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டர் பதிவில் :

இது ஒரு முட்டாள்தனமாக கேள்வி அல்ல. ஆனால் இந்த கேள்விக்கு என்னுடைய நேரடியான பதில் ஒன்று தான். நான் ஒரு இந்தியன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்தப் பதிவை பலரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக ஒருவர் சக்தே இந்தியா திரைப்படத்தில் வரும் காட்சியை போல் இந்த பதில் அமைந்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார்