ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சுவாரஸ்ய வீடியோ பதிவு

viral post twitter post anand mahindra tiger chasing car
By Swetha Subash Dec 30, 2021 02:34 PM GMT
Report

புலி ஒன்று வனப்பகுதியில் காரை கடித்து இழுக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

ட்விட்டர் தளத்தில் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது சில நல்ல வீடியோக்களை பகிர்ந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்வார்.

அந்த வீடியோக்கள் பலரையும் அதிகம் கவரும். அந்த வகையில் தற்போது அதே மாதிரியாக வீடியோ ஒன்றை அவர் மீண்டும் பகிர்ந்துள்ளார்.

அதில் புலி ஒன்று காரை பின்னால் இருந்து இழுக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பதிவு செய்து,

”சிக்னல் வலைதளத்தில் இந்த வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஊட்டியிலிருந்து மைசூரு செல்லும் வனப்பகுதி சாலையில் தெப்பக்காடு அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

புலி இந்த காரை கடிப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனென்றால் என்னுடன் சேர்ந்து புலியும் மகேந்திர கார்கள் மிகவும் சுவையானது என்பதை ஒற்றுக் கொண்டுள்ளது ” எனப் பதிவிட்டுள்ளார்.