‘’எனக்கு வரும் ஆத்திரத்திற்கு பாக்சிங் ரிங்கிற்குள் வைத்து அடிப்பேன் ‘’ - பொறுமை இழந்த ஆனந்த் மஹிந்திரா காரணம் என்ன?

corona anandmahindra
By Irumporai Nov 26, 2021 11:20 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த சமீபத்திய புதிய கொரோனா வைரஸ்  குறித்து தனது ஆத்திரத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளது ட்ரெண்டிங்கில் உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து தனது  கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ள ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில் :

இந்த கொரோனா பிரச்னையை போதுமான அளவு அனுபவித்தாயிற்று,  ஒரு வேளை கொரோனா  மனிதனாக இருந்தால், அவனை பாக்சிங் ரிங்கிற்குள் வைத்து, அடித்து விரட்டுவேன் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

 மஹிந்திராவைப் பின்தொடரும் ஒருவர் கமென்டில் ஜிஐஎஃப் இல் ஜெர்ரி டாம் குத்தும் கார்ட்டூனுடன் குறியிட்டு, "ஆனந்த் மஹிந்திரா மற்றும் கொரோனா- பாக்சிங் நேரடி காட்சிகள்" என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அதற்கு ஆனந்த் மஹிந்திரா “நான் விரும்பும்படியாக” என்று பதிலளித்தார்.