ஒரு கதைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் உண்டு - ஆனந்த் மகேந்திரா டுவிட்...!
ஒரு கதைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் உண்டு என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா டுவிட் செய்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா. இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார்.
கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுத்தார் ஆனந்த் மகேந்திரா.
தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர் ஆனந்த் மகேந்திரா. இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஆனந்த் மகேந்திரா டுவிட்
இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவுடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இது படத்தொகுப்பு கலைஞரின் சக்திவாய்ந்த படங்களின் தொகுப்பு... ஒரு கதைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை நினைவூட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
A powerful set of juxtaposed images by collage artist @ugurgallen Strikes you in the gut and reminds you that’s there are always two sides to a story… pic.twitter.com/QkYay2m1Vg
— anand mahindra (@anandmahindra) February 21, 2023