10 ஆயிரம் ரூபாய்க்கு கார் செய்து கொடுங்க சார்... - கேட்ட நபருக்கு ஆனந்த் மகேந்திரா பதில் டுவிட் - வைரல்
கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் எனக்கு ஒரு வீடு கட்டி தாருங்கள் என்று பாட்டி கோரிக்கை வைத்தார்.
இது குறித்து அறிந்த ஆனந்த் மஹிந்திரா வீடு கட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னர், மஹேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு கட்டுமானப் பணிகளை நடித்தி முடித்தனர்.
மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார்.
இது குறித்து மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தப் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், டுவிட்டரில் ஒருவர் ஆனந்த் மகேந்திராவிடம் தாங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு கார் ஒன்றை செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஆனந்த் மகேந்திரா.. ஓ... நாங்கள் ஏற்கெனவே, 1500 ரூபாய்க்கு கார் தயாரித்துள்ளோம் என்று அமேசானில் இடம் பெற்ற காரின் புகைப்படத்தை வெளியிட்டு நகைச்சுவையாக பேசியுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆனந்த் மகேந்திராவின் இந்த பதிவை பார்த்து சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
We’ve done even better; made one for under 1.5K ? https://t.co/6ccHGYxTYB pic.twitter.com/wmf9sNpWqR
— anand mahindra (@anandmahindra) May 17, 2022