‘கலங்கரை விளக்கமாக இருங்கள்.... அலைகள் உங்களை தாக்கட்டும்....’ - ஆனந்த் மகேந்திரா டுவிட்...!

Viral Video Anand Mahindra
By Nandhini Feb 20, 2023 01:25 PM GMT
Report

‘கலங்கரை விளக்கமாக இருங்கள்.... அலைகள் உங்களை தாக்கட்டும்....’ என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா மக்களுக்கு தன்னம்பிக்கையூட்டம் விதமாக டுவிட் செய்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா. இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார்.

கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளிக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுத்தார் ஆனந்த் மகேந்திரா.

தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர் ஆனந்த் மகேந்திரா. இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

anand-mahindra-be-a-lighthouse-viral-video

கலங்கரை விளக்கமாக இருங்கள்

இந்நிலையில், ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில்,

கலங்கரை விளக்கமாக இருங்கள். அலைகள் உங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கட்டும், உங்களைத் தட்டிச் செல்ல முயல்கின்றன. ஆனால் நீங்கள் நிமிர்ந்து நின்று உங்களை நம்பினால் உங்கள் ஒளி தொடர்ந்து பிரகாசிக்கும்... என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்... சார்... மிக்க நன்றி... என்று நெகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.