741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வரையப்பட்ட ஆனந்த் மகேந்திரா உருவம் - வைரலாகும் வீடியோ - நெகிழ்ச்சி பதிவு

By Nandhini May 23, 2022 05:53 AM GMT
Report

கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் எனக்கு ஒரு வீடு கட்டி தாருங்கள் என்று பாட்டி கோரிக்கை வைத்தார்.

இது குறித்து அறிந்த ஆனந்த் மஹிந்திரா வீடு கட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்தார். 

பின்னர், மஹேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு கட்டுமானப் பணிகளை நடித்தி முடித்தனர். மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார்.

இது குறித்து மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தப் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் 741 பழங்கால தமிழ் எழுத்துக்களில் ஆனந்த் மகேந்திரா படத்தை வரைந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த வீடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவில், ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது, நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வரையப்பட்ட ஆனந்த் மகேந்திரா உருவம் - வைரலாகும் வீடியோ - நெகிழ்ச்சி பதிவு | Anand Mahindra