நான் அந்த சாலை வீரனை சந்திக்க வேண்டும்.... - ஆசைப்பட்டு வீடியோ பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா

By Nandhini Apr 30, 2022 05:51 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒருவர் தலையில் ஹெல்மேட் அணிந்து பால் விற்பதற்காக கூரை இல்லாத, கம்பிகளை கொண்டு கட்டப்பட்ட வாகனத்தை அவர் அழகாக இயக்கி ஓட்டிச் செல்கிறார்.

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவருடைய வாகனம் சாலை விதிமுறைகளை பூர்த்தி செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சக்கரங்கள் மீதான அவரது ஆர்வம் கட்டுப்பாடில்லாமல் இருக்கும் என்று நம்புகிறேன்... நீண்ட காலமாக நான் பார்த்த மிகச்சிறந்த விஷயம் இது. நான் இந்த சாலை வீரரை சந்திக்க வேண்டும்... என்று பதிவிட்டுள்ளார்.