நடிகர் ஆனந்த கண்ணன் கடைசியாக வைத்திருந்த வாட்ஸ் ஆப் dp என்ன தெரியுமா?
மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் கடைசியாக வைத்திருந்த வாட்ஸ் அப் dp இணையத்தில் வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் நிறைய பிரபலங்கள் சினிமாவில் ஜொலித்தார்கள்.
அதில் ஒருவர் தான் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன். இவர் நேற்று உயிரிழந்தார் என அதிர்ச்சி செய்தி வர ரசிகர்கள் அனைவரும் கடும் துக்கத்தில் உள்ளனர்.

ஆனந்த கண்ணன் சில வருடங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறாராம். தொகுப்பாளர் என்பதை தாண்டி சீரியல் மற்றும் படங்களும் நடித்துள்ளார்.
தொகுப்பாளர் துறை மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கிறார். இவர் இறப்பதற்கு முன் கடைசியாக தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை தான் வாட்ஸ் அப் DPயாக வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.