நிச்சயம் முடிந்த கையோடு.. ஆன்மீக பயணத்தில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்
குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம் செய்தனர்.
ஆனந்த் அம்பானி
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு விரைவில் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருடன் திருமணம் நடக்கவுள்ளது. முன்னதாக, ‘கொல் தானா’ என அழைக்கப்படும்

பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா, மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலா இல்லத்தில் நடைபெற்றது. அதில், பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஆன்மீக பயணம்
தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் வந்த முகேஷ் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் அதிகாலை நடைபெற்ற திருப்பாவாடை சேவையில் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், கேரளாவின் குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தான அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.அதன்பின், இருவரும் புன்னத்தூர்கோட்டை யானைகள் சரணாலயத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம் IBC Tamil