அடடே.. பிரேக்பாஸ்ட், லஞ்ச்; நல்ல சம்பளம் - பிரபல ஐடி நிறுவனம் அசத்தல் அறிவிப்பு!

Bengaluru
By Sumathi May 16, 2024 06:21 AM GMT
Report

ஐடி நிறுவன ஒன்றின் அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

ஐடி நிறுவனம் 

பெங்களூரில் அனக்கின் (Anakin) எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடடே.. பிரேக்பாஸ்ட், லஞ்ச்; நல்ல சம்பளம் - பிரபல ஐடி நிறுவனம் அசத்தல் அறிவிப்பு! | Anakin Hiring Software Development Engineer

அதன்படி, சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு, ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். குறிப்பாக பிடெக், எம்டெக், பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருந்தால் முன்னுரிமை.

8 மணி நேரத்திற்கு மேல் சிஸ்டம் வேலை செய்யாது - எச்சரிக்கும் ஐடி கம்பெனி

8 மணி நேரத்திற்கு மேல் சிஸ்டம் வேலை செய்யாது - எச்சரிக்கும் ஐடி கம்பெனி

பணிக்கான தகுதி

0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது ஒரு ஆண்டு Internship அனுபவம் தேவை. Backend Programming Languages அல்லது Full Stack உள்ளிட்டவற்றை நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு Beautiful Soup, Selenium, Scarpt தெரிந்திருக்க வேண்டும்.

அடடே.. பிரேக்பாஸ்ட், லஞ்ச்; நல்ல சம்பளம் - பிரபல ஐடி நிறுவனம் அசத்தல் அறிவிப்பு! | Anakin Hiring Software Development Engineer

எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றை புரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், மேலும் Web crawling, Scraping Knowledge, Reverse Engineering, Rdis, Kubernotes, Django/Flask தெரிந்திருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நல்ல கம்யூனிகேசன் திறமை வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் வசதி உண்டு. பணியின்போது அவலகத்திலேயே காலை மற்றும மதிய உணவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.