விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டிய கனடா மேயர் : வைரலாகும் வீடியோ

Vijay Canada
By Irumporai Jan 25, 2023 09:19 AM GMT
Report

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது, இவர் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் உள்ள அரபிக்குத்து பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வைரலானது, நாம் அறிந்ததே.

விஜய் மக்கள் இயக்கம்

குறிப்பாக விஜய் தனது ரசிகர்களை ஒன்றிணைத்து ரசிகர் மன்றத்தை ஆரம்பத்தில் தொடங்கினார். பின்னர் தனது ரசிகர்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கமாக தற்போது நடத்தி வருகின்றார்.

விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டிய கனடா மேயர் : வைரலாகும் வீடியோ | Anadian Mayor Congratulates Vijays Fan Club

விஜய் மக்கள் இயக்கத்தினர் அவ்வப்போது சமூகத் தொண்டுகளை செய்து வருவதன் மூலம் மக்களின் பார்வை அவர்களின் மீது சென்றது. குறிப்பாக கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் வெற்றி பெற்றனர்.

கனடா மேயர் பாராட்டு

இந்த நிலையில் கனடாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினை கனடிய மேயர் பாரட்டியுள்ள வீடியோ தற்போது ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் கனேடிய மேயர் மரியன் மீட் வார்டு கனடாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பான சமூக வேவைகளை செய்து வருவதாகவும்.

இரத்ததானம், இலவச உணவு வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வருவதாக பாரட்டி கூறியுள்ளார். இந்த வீடியோவை விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.