ஆதார் கார்டு வைத்திருக்கும் உங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!

Government Of India Income Tax Department
By Thahir Mar 23, 2023 08:25 AM GMT
Report

பான் கார்டுடன் ஆதார் எண்னை இணைப்பதற்கான கடைசி காலக்கெடுவை அறிவித்துள்ளது மத்திய வருமான வரித்துறை.

ஆதார் - பான் இணைப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

முன்னதாக இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் 31 தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆதார் கார்டு வைத்திருக்கும் உங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..! | An Important Notice For You Aadhaar Card Holders

மீண்டும் சில நிபந்தனைகளுடன் இந்த ஆண்டுமார்ச் 31 வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 31க்கு முன்னதாக பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்காத பொது மக்கள் தற்போது ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்தி இந்த இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு மார்ச் 31க்குள் ஆதார் -பான் இணைப்பு தவறும் பட்சத்தில் பான் கார்டுடன் தொடர்பியுடைய பரிவர்த்தனைகள் முடக்கி வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை அட்வைஸ் 

இது குறித்து இந்திய வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் '' வருமான வரிச் சட்டம் 1961 இன் படி ,

ஆதார் கார்டு வைத்திருக்கும் உங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..! | An Important Notice For You Aadhaar Card Holders

அனைத்து பான் அட்டை வாடிக்கையாளர்களும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக , பான் கார்டுடன் ஆதார் எண் இணைந்திருக்க வேண்டும் எனவும் 2023 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ஆதாருடன் இணைக்காத பான் அட்டைகள் முற்றிலும் செயலிழந்து விடும் என்றும் , ஆதார் -பான் கார்டு இணைப்பது கட்டாயமானது ,அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதம் 

2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் காலக்கெடுவை தவற விட்டவர்களுக்கு ,அதே ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரையில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பிறகு இனி 2023 மார்ச் 31 ஆம் தேதி வரையில் ஆதார் எண் இணைக்க பட உள்ளவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.