மனைவியைக் காதலனுக்கே திருமணம் செய்துவைத்த கணவன் - ஆனால் ஒரு கோரிக்கை!

Uttar Pradesh Marriage Relationship
By Sumathi Mar 27, 2025 12:16 PM GMT
Report

தனது மனைவியை அவருடைய காதலனுக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மனைவியின் காதல்

உத்தரப்பிரதேசம், சாண்ட் கபிர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவருக்கும் ராதிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017இல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

மனைவியைக் காதலனுக்கே திருமணம் செய்துவைத்த கணவன் - ஆனால் ஒரு கோரிக்கை! | An Get Wife Married Her Lover Viral Up

இவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில், ஜோதிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணத்தை மீறிய தகாத உறவு இருந்துள்ளது. இதனையறிந்த குடும்பத்தினர், பப்லுவை வரவழைத்துள்ளனர்.

7 அடி பள்ளத்தில் யோகா ஆசிரியரை உயிருடன் புதைத்த கணவன்! என்ன காரணம்?

7 அடி பள்ளத்தில் யோகா ஆசிரியரை உயிருடன் புதைத்த கணவன்! என்ன காரணம்?

கணவன் செய்த செயல்

தொடர்ந்து இந்த விவகாரத்தை சரிசெய்ய முயன்றுள்ளார். இருப்பினும் மனைவி காதலனுடன் உறவை தொடர்ந்து வந்துள்ளார். எனவே, தனது மனைவியை அவருடைய காதலனுக்கே திருமணம் செய்து வைக்க பப்லு முடிவு செய்துள்ளார்.

மனைவியைக் காதலனுக்கே திருமணம் செய்துவைத்த கணவன் - ஆனால் ஒரு கோரிக்கை! | An Get Wife Married Her Lover Viral Up

அதன்படி, தனது மனைவியின் காதல் விவகாரத்தை ஊர் மக்களிடம் தெரிவித்து, நீதிமன்றத்திற்குச் சென்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். பின் அவர்களை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இறுதியில், தனது இரண்டு குழந்தைகளை தானே வைத்துக் கொள்ள விரும்புவதாக ஜோதியுடம் கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.