விமானத்திற்காக 7 மணி நேரம் காத்திருந்து கோபமான இளையராஜா - பதறிபோன அதிகாரிகள்
சென்னை விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா 7 மணி நேரம் காத்திருந்ததால் கடும் கோபம் அடைந்தததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தில் இளையராஜா
தமிழ் சினிமாவின் தன் இசையால் மக்களை ஈர்த்தவர் இசைஞானி இளையராஜா. உலகமெங்கும் இசைக் கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில் ஹங்கேரி நாட்டில் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நாட்டிற்கு செல்வதற்காக இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு அதிகாலை 2 மணிக்கு சென்றுள்ளார்.
விமானங்கள் தாமதம்
சென்னையில் நள்ளிரவு பலத்த மழை பெய்ததால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் சிக்கல் நிலவியது. இதன் காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தரையிரங்க இருந்த சில விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பபட்டன.
7 மணி நேரம் காத்திருப்பு
மழையால் இளையராஜா துபாய் செல்லவிருந்த விமானமும் தாமதம் ஆனது. 2 மணி நேரம் தாமதம் ஆகும் என கூறப்பட்ட நிலையில் ரன்வேயில் தேங்கிய மழைநீர் என்ற பல்வேறு காரணங்களால் 7 மணி நேரம் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டென்ஷன் ஆன இளையராஜா அதிகாரிகளிடம் டென்ஷனாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இளையராஜா துபாய் புறப்பட்டுச் சென்றார்.