33 ஆண்டு பழைய வழக்கு... 84 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை!

India Crime Bihar World
By Vinoja Jun 03, 2026 09:05 AM GMT
Report

பீகார் மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில், 84 வயதான முதியவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பீகார்- வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த தீப் ராய் என்பவருக்கு எதிராக, 1992ஆம் ஆண்டு கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.கிராமத்தில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டதாக அறியப்படுகின்றது.

33 ஆண்டு பழைய வழக்கு... 84 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை! | An 84 Year Old Man Has Been Sentenced To Prison

குறித்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், காவல்துறை 1993ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதன்பின், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சிலர், விசாரணை நிறைவடையும் முன்பே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

33 ஆண்டு பழைய வழக்கு... 84 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை! | An 84 Year Old Man Has Been Sentenced To Prison

வழக்கில் ஆஜரான 10 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், தீப் ராயை கலவரத்தில் ஈடுபட்டது, ஆயுதங்களுடன் கலவரத்தில் பங்கேற்றது மற்றும் கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட குற்றங்களில் குற்றவாளி என அறிவித்தது.

இதையடுத்து, தற்போது 84 வயதாகும் தீப் ராய்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, நீதித்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.