60 கிலோ எடையை துாக்கி அசத்திய 8 வயது சிறுமி - வைரலாகும் வீடியோ

Viral Video Instagram
By Thahir May 30, 2023 10:11 AM GMT
Report

இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோவில் 8 வயது சிறுமி ஒருவர் 60 கிலோ எடையை துாக்கி அசத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

வைரலாகும சிறுமியின் வீடியோ

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி .ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் பளுதுாக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை துாக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

An 8-year-old girl who weighed 60 kg was amazing

பின்னர் அவர் கம்பீரமாக நடந்து வரும் வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் அர்ஸியாவை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

இந்த சிறுமியின் செயல் இளைஞர்கள் பலருக்கும் நம்பிக்கையும், உத்வேகத்தையும் கொடுக்கும் என்றும், இவரால் ஒரு நாள் இந்தியா பெருமையடையும் என்றும் சில பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.