நடுரோட்டில் 2-வது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்!
பிரபல நடிகை தனது 2வது காதலனுடன் லிப்லாக் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை
பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன் கடந்த 2010-ம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து விக்ரமின் தாண்டவம், விஜய்யுடன் தெறி, ஷங்கர் இயக்கிய ஐ மற்றும் ரஜினிக்கு ஜோடியாக 2.0 என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே ரிலேஷன்ஷிப்பில் இருந்தார், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மேலும், இவர்கள் கடந்த 2019-ல் பிரிந்தனர்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், பிரிட்டிஷ் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை 2 வருடங்களாக காதலித்து வருகிறார். இவர்கள் அடிக்கடி டேட்டிங் சென்று வருகின்றனர், அப்பொழுது எடுத்த புகைப்படத்தை நடிகை எமி ஜாக்சன் தனது காதலனின் பிறந்தநாளன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில் அவர்கள் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இருந்தது, மேலும் அவர்கள் நடுரோட்டில் லிப்லாக் அடிக்கும் காட்சிகள் இருந்தது. அதனை குறிப்பிட்டு சிலர் கமெண்டில் உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.