திருமணம் ஆகாமலேயே தாயான பிரபல நடிகை - புது காதலருடன் திருமணம்!
எமி ஜாக்சன், எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகை எமி
தமிழில் மதராச பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். ரஜினியுடன் 2.0, விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுசின் தங்கமகன், உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் 6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் மலர்ந்த காதலையும் முறித்தார்.
திருமணம்
தொடர்ந்து லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜை காதலித்து திருமணத்தை நிச்சயம் செய்த நிலையில் கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குவை காதலித்து வருகிறார்.

இதுகுறித்து, எட்வெஸ்ட் விக் என் உணர்வுகளுடன் இணைதுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம். நான் நடித்துள்ள தமிழ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. என் மகன் உலகை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படப்பிடிப்புக்கு அழைத்து சென்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan