கணவரை பிரியும் தனுஷ் பட நடிகை - அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

dhanush amyjackson actoredwestwick
By Petchi Avudaiappan Feb 16, 2022 12:33 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை எமி ஜாக்சன் தனது கணவரை பிரிந்து வேறு ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் 2009 ஆம் ஆண்டு ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கெத்து, தெறி, தங்கமகன், 2.0, ஐ, ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப் பிரபலம் ஆனார். 

தொடர்ந்து ஹாலிவுட் டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் லண்டன் சென்ற எமி தனது காதலர் ஜார்ஜ் பனயோட்டோவுடன் லிவ்விங் டூ கெதர் முறையில் இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண்குழந்தை பிறந்ததையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

கணவரை பிரியும் தனுஷ் பட நடிகை - அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி | Amy Jackson Dating With British Actor Ed Westwick

இதனைத் தொடர்ந்து சில மாதங்கள் கழிந்த நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜார்ஜ் பனயோட்டோவின் புகைப்படத்தையும், அவரின் பெயரையும் நீக்கினார். இதனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்து எமியோ, ஜார்ஜோ எந்த கருத்தையும் தெரிவிக்காதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் எமி ஜாக்சன் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்து வருவதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகரான எட் வெஸ்ட்விக் சன் ஆப் சாரோ, ரோமியோ ஜூலிட் , பில்லியனர் ரான்சம் போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.