காதலனுடன் முதல் குழந்தை பெற்ற நிலையில் சக நடிகருடன் காதல் வலையில் ஏமி ஜாக்சன்
மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல நடிகை ஏமி ஜாக்சன்.
தன் அசாத்திய நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பெற்றவர்.
இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் ‘ஐ’, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘2.0’, நடிகர் விஜய்யுடன் தெறி, தனுஷுடன் தங்கமகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அறியப்பட்டார்.
இவர் ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமுற்று தன் முதல் குழந்தையை வரவேற்ரார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதனை தொடர்ந்து காசிப் கேர்ள் என்ற படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் காதல் மலர்ந்து அவருடன் ஏமி ஜாக்சன் உறவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகர் எட் வெஸ்ட்விக் மீது பல பாலியல் புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.