‘’ அமுதா ஐ.ஏ.எஸ் வந்துட்டாங்க இனிமே நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ‘’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அமுதா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதால் மகளிர் சுய உதவி குழுக்கள் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, விழாவில் பேசிய முதல்வர் அவர்கள்: "யாரையும் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதே மகளிர் சுயஉதவி குழுக்களின் நோக்கமாக உள்ளது.
இத்தகைய மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்காக திமுக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக கூறினார். மேலும் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,அத்துறைக்கு அமுதா அவர்களை செயலாளராக நியமித்தேன்.
தருமபுரி ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய அவர், மகளிர் பயன்பெறும் வகையில் பொறுப்பை சிறப்பாக எடுத்துச் செல்வார்.அதனால்,இனி மகளிர் சுயஉதவி குழுக்களின் நிலை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.