கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - அமுதா ஐ.ஏ.எஸ் தீவிர விசாரணை!

Crime Tirunelveli
By Sumathi Apr 10, 2023 09:47 AM GMT
Report

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணையை தொடங்கியுள்ளார்.

லாக்அப் டார்ச்சர்

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவந்திபுரத்தைச் சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது சகோதரர்களான செல்ல பாண்டியன், மாரியப்பன் உள்ளிட்டோரை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பற்களைப் பிடுங்கி கடுமையாக சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டினர்.

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - அமுதா ஐ.ஏ.எஸ் தீவிர விசாரணை! | Amutha Ias Inquiry Custodial Torture Issue Nellai

இதன் காரணமாக, பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்பு பட்டியலுக்கு அனுப்பப்பட்டார். அதனையடுத்து இந்தவிவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் - ஆட்சியர் விசாரணை நடத்திவந்தார்.

 அமுதா விசாரணை

இந்நிலையில், அமுதா தலைமையில் சிறப்பு விசாரணை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி அமுதா ஐஏஎஸ் வருவாய் வட்டாசியர் அலுவலகத்தில் விசாரணையைத் தொடங்கினார்.

பணியாளர்கள் மற்றும் மனு கொடுக்க வருபவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு வருபவர்கள் சோதனைக்கு பின் தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் காவல் ஆய்வாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.