ஒரே பதட்டமாயிட்டேன் சார் : 50 மாணவிகளுக்கு நடுவில் அமரவைக்கப்பட்ட மாணவர் மயக்கம்
50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வெழுத சென்ற பிளஸ் 2 மாணவர் ,பதட்டத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு
பிஹார் ஷெரிஃப் அல்லாமா இக்பாக் கல்லூரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மணி சங்கர். இவர் பிஹார் மாநிலம், நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுதச் சென்றார்.
அங்கு 50 மாணவிகள் தேர்வெழுத வந்திருந்தனர். மாணவர் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில், தான் ஒரே ஒரு மாணவனாக அமர வைக்கப்பட்டார். இதை அறிந்ததும் அவர் மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த மாணவன்
அதைத் தொடர்ந்து அவருக்குக் காய்ச்சல் உண்டானது. இதனால் மாணவர் மணி சங்கர் அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார் .
இந்த நிலையில் மாணவன் மயங்கி விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.