'அண்ணாத ஆடுறார் ஒத்திக்கோ..ஒத்திக்கோ..வைரலாகும் போலீசின் குத்தாட்ட வீடியோ..

Dance Viral Video Amole Kamble
By Thahir Aug 07, 2021 06:22 AM GMT
Report

காவல்துறை அதிகாரி ஒருவர் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

காவலர் தன்னுடைய மன அமைதிக்காக நடனமாடி வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட நடன வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி உள்ளது.

மும்பை காவல்துறையில் நைகான் பகுதியின் காவல்துறை தலைமையகத்தில் பணிபுரிபவர் அன்மோல் யஷ்வந்த் காம்ப்ளே. இவர் தன்னுடைய பணி நேரங்களுக்கு பிறகு ஓய்வு நேரங்களில் நடனம் ஆடி மகிழ்வதை தன்னுடைய வாடிக்கையான பொழுதுபோக்காக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு இளைஞருடன் தன்னுடைய பணி முடிந்து வீடு திரும்பிய பிறகு மும்பை காவல்துறை உடையுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதில் தமிழில் வெளியான அண்ணாத்த ஆடுரார் என்ற பாடலின் இந்தி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் 18 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். காவலர் ஒருவர் தன்னுடைய பணி சுமையை குறைக்க நடனம் ஆடுவது பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தவிர அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் பல வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.