குண்டாகிவிட்டதாக பாடி ஷேமிங்...குமுறும் அம்மு அபிராமி
தான் உடலெடை அதிகரித்து விட்டதாக பலரும் தன்னை பாடி ஷேமிங் செய்வதாக நடிகை அம்மு அபிராமி புலம்பி இருக்கின்றார்.
அம்மு அபிராமி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான "அசுரன்" படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து இருந்தவர் அம்மு அபிராமி. அப்படத்திற்கு முன்பாகவே அம்மு அபிராமி, விஷ்ணு விஷாலின் "ராட்சசன்" படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வரும் இவர், தமிழை தாண்டி தெலுங்கு மொழி படங்களிலும் தற்போது நடிக்க துவங்கி இருக்கின்றார். அடுத்ததாக தமிழில், கண்ணகி, யார் இவர்கள், கோலிசோடா 1.5 போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

படங்களில் நடிக்கதுவங்கிய போது ஒல்லியாக இருந்த அம்மு அபிராமி, தற்போது சற்று உடல் எடை கூடி காணப்படுகின்றார். இதனை பலரும் விமர்சிக்க துவங்கி இருக்கின்றனர். இது குறித்து தொடர்ந்து அவர் மீது எழுப்பப்பட்டு வந்த கேள்விகளுக்கு அவரே பதில் ஒன்றையும் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது - நான் குண்டாகி விட்டது எனக்கும் தெரியும் - அதனை குறைக்கும் முயற்சியில் உள்ளேன் என பதிவிட்டு, எனக்கு பிடித்ததை என்னுடைய சந்தோஷத்திற்காக நான் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : காவல்துறை எச்சரிக்கை IBC Tamil