அமோனியா வாயு கசிவு: எதிர்கட்சியினர் அமளி

TVK
By Fathima Jun 22, 2026 05:02 AM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று தொடங்கியது.

முதலமைச்சர் விஜய்க்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முதலமைச்சர் விஜய் 53வது வயதில் அடியெடுத்து வைக்கிறார், தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரராக விளங்கும் முதலமைச்சர் விஜய் பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகள் புரிய வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார்.

இதற்கு முன்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்குமாறு கேட்டதால் அமளியானது, சபாநாயகர் வாய்ப்பு கிடைக்கும் போது பேசுங்கள், முதலில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பர்வேஸ், அமோனியா வாயு கசிந்தது எதிர்பாராத விபத்து, இதனால் 5 பேர் பலியாகி உள்ளனர், மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

உயிரிழந்தவர்களின் உடல்கள் தமிழக அரசின் செலவில் அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.