அமோனியா வாயு கசிவு விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன்
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர், இவர்களில் 8 பேர் ஒடிசாவையும், 2 பேர் அசாமையும் சேர்ந்தவர்கள்.
விபத்து குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், தொழிலாளர்கள் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்ட பெண், ஆந்திராவில் உயிருடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஒடிசாவை சேர்ந்த பூர்ணிமா ஜுவாங்கா என்ற பெண் உயிருடன் உள்ளதும், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை போலி என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது, தொழிலாளர்கள் எதன் அடிப்படையில் பணியமர்த்தினார்கள் என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்துள்ளன.
