அமமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிக? நடப்பது என்ன?

election tamilnadu dmdk ammk
By Jon Mar 10, 2021 02:19 PM GMT
Report

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கும் தேமுதிக இப்போது அமமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் இவர்கள் கேட்பதும் அவர்கள் கொடுப்பதாக சொல்வதுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது. மேலும் அதிமுக டெபாசிட் கூட ஒரு தொகுதியிலும் வாங்காது என தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் ஆவேசமாகப் பேசி வருகிறார்கள்.

இதனையடுத்து, தேமுதிக தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கும் சூழ்நிலையில், தேமுதிக தனித்து 140 தொகுதிகளில் போட்டி என்றும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அமமுகவோடும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் 50 சீட் தரும் பட்சத்தில் அங்கே கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  


Gallery