சசிகலாவை அவதூறாக பேசுவதா? - நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு
சசிகலா பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில தினங்களுக்கு முன் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். சசிகலாவால் அதிமுக.,வில் ஒரு சதவீதம் கூட பாதிப்பை ஏற்படுத்த முடியாது என கூறினார். இது அவரது ஆதரவாளர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில், பாளையங்கோட்டை பகுதி கழக செயலாளர் ரமேஷ் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும்
தொடர்ந்து சசிகலா பற்றி இதுபோல அவதூறாக பேசினால் நத்தம் விஸ்வநாதன் தமிழகத்தில் எந்த பகுதிக்கும் வரமுடியாது என தெரிவித்தனர்.