பாஜக கூட்டணியில் அமமுக? தீவிர பேச்சுவார்த்தை - வெளியான தகவல்!

Tamil nadu BJP TTV Dhinakaran
By Sumathi Feb 05, 2024 12:58 PM GMT
Report

பாஜக - அமமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக - அமமுக 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.

dhinakaran - annamalai - panneerselvam

அதேபோல், அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாஜக திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில், பாஜக - அமமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

யார் இந்த டிடிவி தினகரன்.? அமமுகவின் சாதனையும்...சறுக்கல்களும்..!

யார் இந்த டிடிவி தினகரன்.? அமமுகவின் சாதனையும்...சறுக்கல்களும்..!

தொகுதிப் பங்கீடு?

தொடர்ந்து, 22 தொகுதிகள் அடங்கிய விருப்பபட்டியலை பாஜக மத்திய தலைமைக்கு அமமுக அனுப்பியதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடமிருந்தும் தொகுதிப் பட்டியலை பாஜக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ammk-joins-bjp-alliance

அமமுகவிற்கு 11 முதல் 15 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என பாஜக மத்திய தலைமை பதில் கூறியதாகவும் தெரியவருகிறது. மேலும், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, வரும் 11-ஆம் தேதி சென்னை வரும்போது கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.