அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இருந்த தேமுதிக கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் 60 (அறுபது) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த தோழமை உடன்பாட்டை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தில் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவன், அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.