அமமுக கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்

dhinakaran ammk statement
By Jon Mar 12, 2021 05:30 PM GMT
Report

சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். சட்டபேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் சட்டபேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கும் அம்மா பொருளாதார புரட்சித் திட்டம், விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வீடு தேடி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் எஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அமமுக கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.